செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (10:06 IST)

தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றிய விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Rajiv Gandhi
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம்
 
இந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இவர்களிடம் 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இன்னும் 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran