1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (07:09 IST)

இன்று அதிகாலை வேலூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இன்று அதிகாலை வேலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று திடீரென வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலநடுக்கம் குறைந்த அளவில் இருந்ததால் பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்றும் இருப்பினும் ஒரு சிலர் உணர்ந்து அச்சப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கட்டிடங்கள் மட்டும் லேசாக குலுங்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது