1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல் விலையை அடுத்து குறைந்தது டீசல் விலை: மக்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பெட்ரோல் மீதான வரியை ரூபாய் மூன்று குறைப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்தார். இதனை அடுத்து மறுநாளே பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து லிட்டர் விலை ரூபாய் 99.47 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழக அரசின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் விலை குறைந்த நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக டீசல் விலையும் குறைந்துள்ளது. இன்று டீசல் விலை 19 காசுகள் குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இன்றைய டீசல் விலை 94.20 ரூபாய் என்ற நிலையில் சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்பதால் நேற்றைய விலையான ரூ.99.47 என்ற விலையில் பெட்ரோல் விலை விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது