புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

போகி பண்டிகையை வரவேற்கும் தமிழர்கள்: பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டம்!

போகி பண்டிகையை வரவேற்கும் தமிழர்கள்: பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டம்!
ஒவ்வொரு ஆண்டும் தை தைத்திங்கள் பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதும் அந்த தினத்தில் வீட்டில் உள்ள பழைய பொருள்களை வீட்டின் வெளியே போட்டு எரித்து கொண்டாடுவது தமிழர்களை வழக்கமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் நாளை தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வைத்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
குறிப்பாக பொங்கலை வரவேற்கும் விதமாக சிறுவர் சிறுமியர்கள் மேளம் அடித்து உற்சாகமாக கொண்டாடி வரும் காட்சிகளை பார்க்க முடிகிறது
 
போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வைத்து எடுத்தால் சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது என்பது குறிபிடத்தக்கது