புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (15:13 IST)

போதைக் கும்பல் யாரை குறிவைக்கிறது ? போலீஸ் அதிகாரி எச்சரிக்கை !

இன்றைய நாகரீகம் உச்சாணிக் கொம்பில் கொடிகட்டிப் பறக்கிறது. அதனால் வருமானத்திற்கு ஏற்ப செலவு என்பது போல, செலவுக்கேற்ப வருமான வேண்டும் என்ற ரீதியில் நவீன உலகம் மாறிவருகிறது. அதனால் பெற்றோர் தம் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகிறது. எனவே பல பிள்ளைகள் பாதை மாறி போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. 
இந்நிலையில் இன்று ஜூன் 26 போதை ஒழுப்பு தினம். இதையொட்டி நம் வீட்டு குழந்தைகளுக்கு போதையின் பிடியில் சிக்காமல் இருக்க பெற்றோர் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென போதைப்பொருள் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஆனி விஜயா கூறியுள்ளதாவது :
பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளைச் சுற்றி நன்கு கவனியுங்கள், வெறுமமே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துப் போய், திரும்ப வருவதாக மட்டும் இல்லாமல்  பிள்ளைகளை நன்கு கவனிக்க வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் விற்பவர்கள் உணவுபண்டம் மூலமாகத்தான் அதை விற்கிறார்கள். பள்ளிக்கருகில் அமைந்துள்ள கடைகளை கவனியுங்கள். உங்களுக்கு எதாவதும் சந்தேகம் வலுத்தால் 044 - 28511587 இந்த எண்ணுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 
குறிப்பாக போதை மருந்துவிற்பவர்கள், 13- 14 வயதுடைய 9வது, 10 வது படிக்க்கும், மாணவர்களைத்தான் அதிகம் குறிவைக்கிறார்கள். இந்த வயதுடைய பிள்ளைகளுக்குத்தான் மன அழுத்தம், போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே பிள்ளைகளை கருத்துடன் கண்கானித்து வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவுறை அனைத்து பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.