Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும்: ஓ.பன்னீர்செல்வம்!

Sasikala| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:42 IST)
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன்  ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம். அதிமுக பொதுச்  செயலாளராக வேண்டியவர் மதுசூதனன் தான். 
 
சசிகலா கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன், அரசியலில் பங்கேற்க மாட்டேன் என ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம்  தந்தவர் சசிகலா. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி குடும்பச் சொத்தாக மாற்ற சசிகலா நினைக்கிறார். 
 
யார் நாடகமாடினார்கள், யார் துரோகம் செய்தார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் செயற்கையான குற்றச்சாட்டுகளை  சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும் எனவும் கூறியிருக்கிறார்.
 
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். போயஸ் கார்டன் “ஜெயலலிதா நினைவு  இல்லமாக மாற்றப்படும்” எனவும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :