வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (08:12 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..! எத்தனை நாள்?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் இன்று ஒரு நாள் கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் என்றும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் நேற்று கடைசி நாளில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த நிலையில் தான் திடீரென மைக்ரோசாப்ட் பிரச்சினை காரணமாக பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
 
இது குறித்து விண்ணப்பதாரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று குரூப் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ஆகிய பதவிகளில் விண்ணப்பிக்க இன்று இரவு வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று மைக்ரோசாப்ட் பிரச்சினையால் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இன்று இரவுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளதால் விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த அவகாசத்தை பயன்படுத்தி முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran