போராட்டம் செய்தால் சம்பளம் பிடித்தம்! – மின்வாரியமும் எச்சரிக்கை!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மின்வாரியமும் ஊழியர்களை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. அதுபோல அதே தேதியில் மின்வாரிய ஊழியர்களும் இன்னும் சில அரசுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து தொழிலாளர்களை எச்சரித்துள்ள போக்குவரத்துத்துறை 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும், அன்றைய தினம் போராட்டம் நடத்துபவர்கள், விடுப்பு எடுப்பவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரித்தது. அதை தொடர்ந்து தற்போது மின்வாரியமும் 28,29ம் தேதிகளில் போராட்டம் நடத்தினாலோ, விடுப்பு எடுத்தாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.