உஷா மரணம் எதிரொலி - வாகன சோதனைகளுக்கு தடை

Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (17:51 IST)
திருச்சியில் நேற்று முன் தினம், தனது கர்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து  காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். 

இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தமிழக காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை சாலையில் பொதுமக்கள் வாகன பரி சோதனை செய்யயோ, அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்க வேண்டாம் என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், அதே நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடாததால், நேற்று கடத்தல் சம்பவங்களும், குற்றங்களும், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் அதிகமாக நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :