வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (22:19 IST)

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தலைமை செயலக ஊழியர்கள்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் இந்த அமைப்பினர் பின்வாங்கவில்லை



 
 
இந்த நிலையில் போராட்டம் செய்பவர்களுக்கு சம்பளம் இல்லை என்றும், போராட்டம் நீடித்தால் மாற்று ஊழியர்கள் எடுக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் தவிர 4,500 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தம் இன்னும் சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது.