திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2017 (10:12 IST)

முதல்வர் மாற்றமா? ஆளுநர் ஆட்சியா?: பரபரக்கும் தமிழக அரசியல் சூழல்!

முதல்வர் மாற்றமா? ஆளுநர் ஆட்சியா?: பரபரக்கும் தமிழக அரசியல் சூழல்!

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓபிஎஸ் அணியும் ஒன்றிணைந்ததையடுத்து தினகரன் அணி தற்போது முதலமைச்சரை மாற்ற போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதியில் புதுச்சேரியில் தங்க வைத்துள்ளனர்.


 
 
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து திமுக, கங்கிரஸ் கட்சிகளும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
இதனால் ஆளுநருக்கு தற்போது முடிவெடுக்க வேண்டியா அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தினகரன் , திவாகரன் ஆகியோர் அமைதியாக இருந்தாலும் அவர்கள் அணியில் மேலும் 20 பேர் வரலாம் என கூறப்படுகிறது. அதற்கான பணிகளை ரகசியமாக செய்து தான் வருகின்றனர். இதனை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி தரப்பு தினகரன் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் பாஜகவோ அதிமுக ஒத்துவந்தால் பார்ப்போம் இல்லையென்றால் ஆட்சியை கலைத்துவிட்டு ஒரு வருடத்திற்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவிட்டு காட்சியை பலப்படுத்திவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலமையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனையறிந்த எடப்பாடி தரப்பு தினகரன் அணியில் உள்ளவர்களுக்கு மூன்று அமைச்சர் பதவி வரை தரலாம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தினகரன் தரப்பின் ஒரே கோரிக்கையாக தற்போது முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்பது தான். இதனால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா இல்லை முதல்வர் மாற்றமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.