1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (16:09 IST)

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்: ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முடிவா?

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஏப்ரல் 15 முதல் மே 3ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. இதனை அடுத்து மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருக்கிறதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு செய்யப்படுமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள பகுதியில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கவும் மற்ற பகுதிகளில் ஊரடங்கு ஓரளவு தளர்த்தும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன