திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:35 IST)

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

college
மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு - அரசாணை வெளியீடு
 
மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் உதவித் தொகைக்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது
 
இந்த திட்டத்திற்காக  மாணவிகள் விண்ணப்பங்கள் அளித்த நிலையில் தற்போது இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது