1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (14:40 IST)

இலங்கை தமிழர் நலனுக்காக ஆலோசனைக்குழு: தமிழக அரசின் அரசாணை!

இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசு அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
இலங்கை தமிழர்களின் நலன் காக்கப்படும் என தேர்தலுக்கு முன்பே திமுக வாக்குறுதி அளித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை தமிழர் நலன் காக்க கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் ஒரு அறிவிப்பாக தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையை அடுத்து மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.