மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆலோசனை.. மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த முடிவு..!
மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கும் முக்கிய அம்சங்கள் பின்வருவன:
10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்களுக்கு அடுத்தகட்ட படிப்பை தொடர உதவி.
8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் கூட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ITI) சேர்ந்து படிக்க போதிய ஆலோசனைகள் மற்றும் உதவி.
10ம் வகுப்பு வரை படித்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (Polytechnic) கல்வியைத் தொடர ஆலோசனை
படிப்பை தொடர விருப்பமில்லா மாணவர்கள் கூறும் காரணத்தை அறிந்து தகுந்த வழி காட்டுதல்.
துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்தல்!
Edited by Mahendran