1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (13:54 IST)

ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி!

இன்று செயல்படுத்தப்பட்டுள்ள மக்கள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதை தடுக்கும் வகையில் மக்கள் ஊரடங்கை செயல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து வணிகர்கள் சங்கம் முழு கடையடைப்பு அறிவித்து ஆதரவு தெரிவித்தது. தமிழக அரசு பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில் சேவைகளையும் நிறுத்தியது. இதனால் மக்கள் தேவையான பொருட்களை நேற்றே வாங்கி கொண்டு வீடுகளில் அடைந்துள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நேரம் நீட்டிக்கப்பட்டு நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.