வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 மே 2021 (08:57 IST)

ஈபிஎஸ் -க்கு அரசு பங்களா, ஓபிஎஸ்-க்கு காலி செய்ய கால அவகாசம்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தங்கி வந்தார். தற்போது அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும்.

ஆனால், அவர் அங்கேயே தங்க கோரிக்கை வைத்ததால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஓபிஎஸ் தனது தம்பியின் மறைவால் பங்களாவை காலி செய்ய காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைத்து விட்டனர்.