Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரபரப்பான சூழலில் தமிழகம்: நாளை கவர்னர் வருகை


Abimukatheesh| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (19:14 IST)
நாளை பிற்பகல் ஆளுநர் சென்னை வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 


தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பி உள்ளார். சட்டசபையில் எனது பெரும்பான்மையை காட்டுவேன் என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வர உள்ளார். நாளை ஆளுநர் வந்த பிறகே என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.

சட்டப்படி பன்னீர்செல்வம் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது. ஆளுநர் சசிகலாவை முதல்வராக அறிவிப்பாரா? அல்லது தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டசபையில் பெரும்பான்மையை காட்ட சொல்வாரா?

நாளை ஆளுநர் வருகையால் மேலும் தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.


இதில் மேலும் படிக்கவும் :