வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (16:10 IST)

பேரறிவாளன் விரைவில் விடுதலை? பிரதமர், ஜனாதிபதியுடன் கவர்னர் முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு சென்றார் என்பதும் அங்கு அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார் என்று தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், மதுரை ஐகோர்ட் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அதிருப்தி குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் எனவே விரைவில் பேரறிவாளன் விடுதலை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனின் கருணை மனு குறித்து முடிவெடுக்காத கவர்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனின் கருணை மனு குறித்து முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் தேவையா? என தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புயது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
 
இதனை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தமிழக ஆளுநரின் இந்த டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது