வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 10 ஜனவரி 2019 (11:01 IST)

எல்லோருக்கும் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும்: தமிழக அரசு முறையீடு

1000ன் ரூபாய் பொங்கல் பரிசை ரத்து செய்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 
 
சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படும் என கூறியிருந்தார்.
 
அதன்படி இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
 
நேற்று நீதிமன்றம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இது மக்களையும், அதிமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில், இந்த தடையை நீக்க கோரி, நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஒப்புதல் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.