வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 மார்ச் 2017 (17:44 IST)

நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடம் - ஈஷா யோகா மையம் மீது தமிழக அரசு புகார்

109 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அங்கீகாரம் பெறாமல் கட்டிடங்களை கட்டியுள்ளதாக ஈஷா யோகா மையம் மீது தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.


 

 
 
 
கோவையில் ஈஷா யோகா மையம் மஹா சிவாராத்திரியை முன்னிட்டு புதிய சிவன் சிலை திறக்கப்பட்டது. இந்த சிவன் சிலை காடுகளை அழித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. ஈஷா யோகா மையம் காடுகளை அழித்து கட்டப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.
 
இந்நிலையில் பழங்குடியினர் பாதுகப்பு சங்க தலைவர், ஈஷா யோகா மையம் 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டுமானம் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் அளிக்க கோரியது. இதற்கு பதில் மனு அளித்த தமிழக அரசு ஈஷா யோகா மையம் மீது புகார் தெரிவித்துள்ளது.
 
ஈஷா யோகா மையம் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியுள்ளது. விதிகளை மீறி கட்டிடங்களை கட்டி வருகிறது என தெரிவித்துள்ளது. மேலும் ஆதியோகி சிவன் சிலை அமைப்பு தொடர்பான ஆவனங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
 
உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.