டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்


Abimukatheesh| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (21:39 IST)
டெல்லியில் கடந்த 7 நாட்களாக நடைப்பெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

 
காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளுடன் தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைப்பெற்று வந்தது.
 
கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடைப்பெற்று வந்தது. இந்த போராட்டத்தில் விவசாயிகள், தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடு மற்றும் மண் சட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டத்திற்கு மத்திய துளி கூட செவி கொடுக்கவில்லை. 
 
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார். விவசாயிகளின் பிரச்சினை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். 
 
இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் அளிப்பது குறித்து வரும் 23ஆம் தேதி உயர்மட்ட குழு கூட்டம் நடைப்பெற உள்ளது. இதில் முடிவு செய்யப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :