திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (17:10 IST)

கரும்பூஞ்சை தொற்று; கண் வீக்கம் வந்தால் உடனே ஹாஸ்பிடல் போங்க! – மருத்துவ குழு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரையிலான கரும்பூஞ்சை தொற்றில் 75 சதவிதம் கொரோனாவால் குணமானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு மருத்துவ குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ குழுவினர் கரும்பூஞ்சை நோய் என்பது, புதிய நோய் அல்ல என்றும், இது 1857-ம் ஆண்டே பரவிய ஒரு நோய்தான் என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த நோயை 100 சதவீதம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும், கண் வீக்கம், மூக்கில் நீர்வடிதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளனர்.