வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (11:47 IST)

எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸை வளைத்த தினகரன்!

எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸை வளைத்த தினகரன்!

எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் ஒன்று சேர்ந்து தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து ஒதுக்கியதை அடுத்து தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் காட்சி மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.


 
 
எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓபிஎஸ் அணியும் ஒன்று சேர்ந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என கடிதம் கொடுத்து, முதல்வரை மாற்ற வலியுறுத்தியுள்ளனர். அதே நேரம் தனது எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மீண்டும் நெருக்கடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை வளைத்துள்ளார் தினகரன். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தினகரன் குடும்பத்துடன் நல்ல உறவில் இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
 
அதே நேரத்தில் அரசியல் சூழல்களில் அவ்வப்போது சசிகலா அணிக்கு ஆதரவாக பேசுபவர் திருநாவுக்கரசர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் பக்கம் பாஜக இருப்பதால் தினகரன் பக்கம் காங்கிரஸ் கட்சி ஈசியாக இணைந்துவிட்டது.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தினகரன் ஒரு முயற்சியை எடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதில் தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் ஆளுநருக்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.