வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (18:51 IST)

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்? : வழக்கறிஞர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி மோடி நழுவிவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். முதல்வரின் இந்த பேச்சு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றுமா என்று கேள்வி எழும்பியுள்ளது.




இந்நிலையில் சென்னை திரும்பும் தனது பயணத்தை ரத்து செய்த முதல்வர் தில்லியில் சட்ட வல்லு நர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி போராட்டம் மிக தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான சட்ட திருத்தம் குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.