வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (11:08 IST)

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து துறையினர்களை போலவே விவசாயிகளும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஒருசில சிறப்பு சலுகைகளை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
இதன்படி விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் வைக்கும் கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு என அறிவித்துள்ளது.
 
அதேபோல் காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும்  என்றும், வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
 
முதல்வரின் இந்த அறிவிப்பு ஊரடங்கால் அவதியுற்று இருந்த விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.