விஷாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது ஏன்?

vishal tn cm" width="600" />
sivalingam|
 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விஷாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

 
அன்புள்ள திரு விஷால் அவர்களுக்கு,
 
இன்று (27.08.2017) நடைபெறும் தங்களது சகோதரி திருவளர்செல்வி ஐஸ்வர்யா ரெட்டி திருமணத்திற்கு வருகை தருமாறு அழைத்தமைக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்
 
இல்லறம் காணும் மணமக்கள் திருவளர்செல்வி ஐஸ்வர்யா ரெட்டி-திருவளர் செல்வன் உம்மிடி க்ரித்திஷ் இருவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
 
மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் உள்ளம் நிறைந்த அன்போடு வாழவும், வாழ்வின் அனைத்து நன்மைகளும் பெற்று வளமோடு வாழவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்' என்று எழுதியுள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :