Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?


Abimukatheesh| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (18:02 IST)
முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பெங்களூர் சிரையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ரம் தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து நேற்று மாலை சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தார். இதையடுத்து இன்று காலை ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். பாண்டியராஜன் வகித்து வந்த அமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஜெ. நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
 
மேலும் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து அசி பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


இதில் மேலும் படிக்கவும் :