1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (10:57 IST)

நிதியமைச்சர் பிடிஆரின் தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்..!

Budjet 2023
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தற்போது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அமளி செய்ததை அடுத்து சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தனர்
இந்த நிலையில் பி டி ஆர் பழனி அவர்களின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்  இதோ:
 
தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம்
 
இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் 
 
அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
 
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு
 
590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். 
 
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
 
இலங்கை தமிழருக்கு வீடு கட்ட மேலும் ரூ273 கோடி நிதி உதவி.
 
போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும்.
 
சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். 
 
தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்.
 
ரூ1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு. 
 
ரூ.110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம். 
 
ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா & இலக்கிய திருவிழா நடத்தப்படும்.
 
Edited by Mahendran