திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (16:39 IST)

காவிரி மேலாண்மை விவகாரம் எதிரொலி: டிவி விவாதங்களில் இருந்து தப்பித்து ஓடும் பாஜகவினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு இந்த வாரியத்தை அமைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் அடுத்து என்ன செய்வார்கள் என்று தமிழக மக்களும், விவசாயிகளும் கவலையுடன் நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அனைத்து செய்தி சேனல்களிலும் இதுகுறித்து காரசாரமாக விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வழக்கமாக டிவியில் விவாதம் செய்யும் பாஜகவினர் இன்று எந்த டிவிக்கும் விவாதம் செய்ய வருவதற்கு மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருசிலர் விவாதத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், ஒருசிலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே இன்று தொலைக்காட்சிகளில் பாஜகவினர் தரப்பில் இருந்து யாரும் இல்லாமலேயே விவாதம் நடைபெறும் என தெரிகிறது. ஆனாலும் விவாதம் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்க தொலைக்காட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.