வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (15:38 IST)

மத்தியப்பிரதேச எம்.பி.யாகும் தமிழக பாஜக பிரமுகர் - காரணம் என்ன?

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை மாநிலங்களவை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
 

 
டெல்லி மேல்சபையில் எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால், அந்த இடத்துக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், காலியாக உள்ள அந்த இடத்தை தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனுக்கு ஒதுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி.யாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ள நிலையில், இல.கணேசனும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜகவின் பலம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடம் கருதுகிறது.
 
மேலும், மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தவதற்கு தகுந்த வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் திட்டமிட்டுள்ளது.