1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (11:13 IST)

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ஆம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 21-ம் தேதி காலை 11 மணிக்கு கூடுவதாக சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.


 
 
2016-17-ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினமே நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
 
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தொடர் 40 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.