1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (14:51 IST)

செப். 8 மட்டும் காலை & மாலை கூடும் பேரவை - காரணம் என்ன?

செப்டம்பர் 8  ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 
 
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி தினமாக கொண்டாடபடும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஊழியர்களுக்கு இருக்கைகள் கட்டாயம் என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் செப்டம்பர் 8  ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
அதோடு சனிக்கிழமை எடுத்துக்கொவதாக இருந்த துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை நடக்கும் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.