வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (08:47 IST)

ஜூன் 10ல் கூடும் சட்டமன்றம்! சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா?

தமிழகத்தில் சமீபத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சபாநாயகர் அறையில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன் பதவியேற்கவுள்ளனர். அதேபோல் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.
 
இந்த நிலையில் வரும் ஜூன் 10ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் ஆரம்பிக்கும் என சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். ஜூன் 10 முதல் ஒரு மாத காலம் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது தி.மு.க கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுகவுக்கு திமுகவை விட அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வி அடையும் என்றே கருதப்படுகிறது. அதேபோல் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவிற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அதிமுக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறப்படுகிறது