1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (09:27 IST)

சூப்பில் மிதந்த ஈ.. ‘எடுத்து போட்டுட்டு குடிங்க’; சப்ளையர் அலட்சியம்!

Soup with Fly
திருவண்ணாமலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சூப்பில் ஈ இறந்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் பிரபலமான சைவ உணவகத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த ஹோட்டலில் சாப்பிட மருத்துவர் ஒருவர் அவரது நண்பர்களோடு சென்றுள்ளார்.

உணவுக்கு முன்னதாக அவருக்கு அளிக்கப்பட்ட சூப்பில் ஈ ஒன்று இறந்து மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சப்ளையரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் சப்ளையரோ அலட்சியமாக, எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுமாறு கூறியுள்ளார். இதனால் மருத்துவரும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த சூப்பை படம் பிடித்துக் கொண்டு பில்லையும் கொடுத்துவிட்டு புகார் செய்ய போவதாக சொல்லிவிட்டு அவர் சென்றுள்ளார். சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள உணவகம் ஒன்றில் பீட்ரூட் பொறியலில் எலி தலை இருந்ததாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.