செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (22:33 IST)

ஆர்.கே.நகர் வாக்குப்பெட்டிகள் எங்கே உள்ளன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் இன்று ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்த நிலையில் இன்று பதிவான மின்னணு இயந்திரங்கள் கொண்ட வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உட்பட 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாக்கு எண்ணப்பட முழுமையாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேராத வகையில் முழு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் 24ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ யார் என்பது காலை சுமார் 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.