தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!


Caston| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (13:12 IST)
நேற்று தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் மேலும் தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் மீண்டும் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு கடலோர ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளதாகவும், குறிப்பாக தெற்கு கடலோர ஆந்திரா, வடக்கு கடலோர தமிழகத்தில் இது வலுவாக உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
 
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :