செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (13:54 IST)

சிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி

சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகள் அங்கு தயாரித்து வந்த நிலையில் உராய்வின் காரணமாக பட்டாசுகள் குபீரென தீப்பிடித்து  வெடித்தன...


இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடி விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வந்த நிலையில் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசரித்து வருகின்றனர்.