மாணவிகள் பாலியல் புகார்: நோட்டிஸ் அனுப்பப்பட்ட 3 பள்ளிகள் இவை தான்!
மாணவிகள் பாலியல் புகார்: நோட்டிஸ் அனுப்பப்பட்ட 3 பள்ளிகள் இவை தான்!
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து மேலும் சில பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆசிரியர்கள் மீது மாணவி அளித்த பாலியல் புகார்கள் பற்றி விளக்கம் கேட்டு அடையாறு கேந்திரா வித்யாலயா, கேளம்பாக்கம் சுசில், குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமி அம்மாள் ஆகிய பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று பள்ளி ஆசிரியர்களும் சம்மனை ஏற்றுக்கொண்டு ஆஜராவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்