செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (07:11 IST)

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு மேலும் மூவர் தாக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் தற்போது வைரஸால் தாக்கப்பட்ட மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
நியூஸிலாந்தில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கும், லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவருக்கும், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து மூவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் மூவரின் உடல்நிலையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் மூன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது