வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (23:44 IST)

மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம்

கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் - அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழுவில் முடிவு.
 
கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் மே மாதம் 8 ம் தேதி முதல் தொடங்க உள்ள கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் சார்பில் மூன்று தினங்கள் மாபெரும் அன்னதானம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதோடு, ஆன்மீக பணிகளில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்பாடு செய்ய இந்த கூட்டம் முழு ஒத்துழைப்பு எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தேசிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.