செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (07:40 IST)

சென்னை நட்சத்திர ஓட்டலை விற்க முயன்ற மூன்று புரோக்கர்கள் கைது!

நட்சத்திர ஹோட்டல்
சென்னை வடபழனி அருகே உள்ள நட்சத்திர ஓட்டலை விற்க முயற்சித்த மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று இடைத்தரகர்கள் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஒரு தொழிலதிபரிடம் இந்த நட்சத்திர ஓட்டலை விற்கப் போவதாகவும் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை புரோக்கர் கமிஷன் கொடுத்தால் தாங்கள் இந்த ஓட்டலை வாங்கி தர தயார் என்றும் பேரம் பேசியுள்ளனர். நட்சத்திர ஓட்டலில் விலை ரூ165 கோடி என பேரம் பேசப்பட்டு உள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் அந்த நட்சத்திர ஓட்டலை வாங்க விரும்பிய கேரள தொழில் அதிபர் ஒருவர் அந்த நட்சத்திர ஓட்டலை ஒவ்வொரு பகுதியாக சுற்றிப் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த நட்சத்திர ஓட்டலின் மேனேஜர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ’தான் இந்த ஓட்டலை 165 கோடி ரூபாய்க்கு வாங்க போவதாகவும், அதனால்தான் சுற்றிப் பார்த்து வருவதாகவும் கூறினார் 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மேனேஜர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அந்த நட்சத்திர ஓட்டலுக்கு வந்து அங்கு அறை எடுத்து தங்கியிருந்த மூன்று புரோக்கர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை நட்சத்திர ஓட்டல் மட்டுமன்றி மேலும் சில முக்கிய கட்டடங்களை அவர்கள் விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது