1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (17:38 IST)

நடு ரோட்டில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் ! பரபரப்பு சம்பவம்

சென்னை பாரியில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில், இன்று ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருவர் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பதை பார்த்து, அருகே இருந்த போக்குவரத்து காவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதைப் பார்த்த கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த ராபர்ட் மற்றும் தீனா ஆகிய இருவரும் போக்குவரத்து காவலரிடம் புகார் அளித்திருந்த்துகொண்டிருந்த வாலிபரை அடையாளம் கண்டு அவரை விரட்டினர்.
 
பின்னர் நடுரோட்டில் அவரைப் பிடித்து சரமாரியாக  அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸார் தாக்குதல் நடத்தியர் ராபர்ட் மற்றும் தீனா இருவரையும் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற   இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.