Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பன்னீர்செல்வத்தின் கீழ் செயல்பட விரும்பாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்: அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!

பன்னீர்செல்வத்தின் கீழ் செயல்பட விரும்பாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்: அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!


Caston| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:23 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போது அமைச்சர்கள் சிலர் சசிகலாவை முதல்வர் பதவியேற்க வேண்டும் என கூறிவருகின்றனர். பன்னீர்செல்வமும் சசிகலா முதல்வராக வழி விடவேண்டும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

 
 
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதனையடுத்து அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பமே தீராத நிலையில் தற்போது அதிமுக அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சிலர் சசிகலா முதல்வராக வேண்டும் என கூறுகின்றனர்.
 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இருந்து கொண்டே அமைச்சர்கள் சிலர் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறுவது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்து பன்னீர்செல்வத்துக்கு அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைச்சர்கள் பேசுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் பேசிய போது, முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் கீழ் செயல்பட விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வராக பன்னீர்செல்வம் இருக்கும் போது அவர் தற்காலிக முதல்வர், இடைக்கால முதல்வர் என்றெல்லாம் கூறக்கூடாது என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :