Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (11:45 IST)

Widgets Magazine

அதிமுக அரசில் முக்கியமான ஒரு அமைச்சராக வலம் வருபவர் செங்கோட்டையன். ஆனால் அவர் திமுகவுடன் மறைமுகமாக உறவு வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி அணியில் இருந்து விலகி தற்போது தினகரன் அணியில் இருப்பவர் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம். இந்த ஆட்சியில் தனது கோரிக்கைகள் நிறைவேறாதது பற்றி நேற்று தனது சொந்த ஊரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய ஒரு கருத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செங்கோட்டையனிடம் எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று முகத்திற்கு நேராக கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இதனையடுத்து அவர்கள் இருவரும் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து திமுகவுடன் செங்கோட்டையன் மறைமுக உறவு வைத்துள்ளது தெளிவாகிறது. கட்சிக்கு துரோகம் இழைத்து ரகசிய உடன்படிக்கை செய்ய முயன்ற செங்கோட்டையனின் முயற்சி முடியாமல் போயுள்ளது.
 
செங்கோட்டையன் தான் யோக்கியன் தான் என சட்டமன்றத்தில் பேசும்போது அவரது முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் கிழித்துவிட்டார். ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியவில்லை. மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். ஆனால் செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது தெரியவருகிறது என தோப்பு வெங்கடாச்சலம் போட்டுடைத்திருக்கிறார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பூமியை போன்று மேலும் 10 கிரகங்கள்: நாசா தகவல்!!

நாசா விஞ்ஞானிகள் பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை கொண்டு மேலும் 10 கிரகங்களை ...

news

திருமாவளவன், சீமானுக்கு மனநிலை சரியில்ல்லையா? எச்.ராஜா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக உள்பட திராவிட கழகங்களை கடுமையாக ...

news

அடுத்த அட்டாக் மு.க.ஸ்டாலின் மீதுதான்: பாஜக கனவு பலிக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்றிவிட ...

news

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய தினகரன் திட்டமா?

கட்சி தினகரனுக்கு ஆட்சி எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று சமீபத்தில் முதல்வரிடம் சமாதானம் ...

Widgets Magazine Widgets Magazine