வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2017 (12:53 IST)

இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும் தெரியுமா? - பயமுறுத்தும் வானிலை மையம்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
வழக்கம் போல் இந்த ஆண்டும் மார்ச் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் தொடங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இன்னும் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
 
தமிழகத்தில் எல்லா கோடை காலத்திலும் சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது அங்கு 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் 102.7 டிகிரியும், நேற்று 104 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 103.2 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில், வழக்காமான வெப்பத்தை விட இந்த வருடம் 5 டிகிசி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
எனவே, அதிகமாக தண்ணீர், மோர், இளநீர் குடிக்க வேண்டும். வெயிலுக்கு இதமான லேசான பருதி ஆடைகளை அணிய வேண்டும், வீட்டில் காற்று உள்ளே வரும்படி ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், குளிர்ந்த நீரில் அவ்வப்போது குளிக்க வேண்டும், வெளியில் சென்றல் தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும், கொழுப்பு நிறைந்த, காரமான, எண்ணைய் பலாகரங்களை தவிர்க்க வேண்டும், இளநீர், நொங்கு, தர்பூசணி ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்லக் கூடாது, மது, தேனீர், காபி ஆகியவை அருந்துவதை தவிர்க்க வேண்டும், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.