வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:37 IST)

திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான்- அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

MANO THANGARAJ
பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது  என தமிழக  தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாத் தகவல் வெளியாது.

அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக!

பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு பிழைப்புகாக வேலை தேடி வருகின்றனர். தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும்  நிலையில், திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான் !’’’   என்று பதிவிட்டுள்ளார்.
 

Edited by Sinoj