வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (19:55 IST)

திருவண்ணாமலை கோவில் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை திருநாளை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


 
 
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 21ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றன. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையெடுத்து,  மாலை 6 மணிக்கு 2 668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்பொழுது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மகா தீபத்தை கண்டு வழிபாடு நடத்தினர்.
 
இந்நிலையில், தமிழகத்திலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருகை புரிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.