விஜய்யிடம் தைரியத்தை இன்றுவரை நான் பார்க்கவில்லை: திருமுருகன் காந்தி
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் குறித்து பலரும் பலவிதமாக கருத்து கூறி வரும் நிலையில் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான திருமுருகன் காந்தி இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
விஜய்க்காக இன்று பலர் ஆதரவாக பேசி வருகின்றனர். ஜிஎஸ்டி குறித்து அவர் பேசிய வசனம் உண்மையென்றால் அவர் முதல் ஆளாக தைரியமாக வெளிவந்து நிஜத்திலும் பேச வேண்டும். ஆனால் இன்று வரை அந்த தைரியத்தை அவரிடம் நாங்கள் பார்க்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.
ஒரு நல்ல ஆளுமையுள்ள கலைஞராக இருந்தால் அவர் தைரியமாக முன்வந்து 'ஆமாம்' ஜிஎஸ்டியால் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று அவர் கூறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று திருமுருகன் காந்தி தனது பேட்டியில் கூறியுள்ளார்.