1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:11 IST)

எங்கள் பிணங்களின் மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும்: திருமாவளவன் டுவிட்

Thirumavalavan
எங்கள் பிணங்களின் மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தை கட்ட முடியும் என அந்த பகுதி மக்கள் தங்களிடம் கண்ணீருடன் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பூர்வீக வாழிடத்தைப் பறிகொடுத்துவிட்டு எமது வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா? என கேட்டு ஏகனாபுரம் மக்கள் கண்ணீர் சிந்தினர். 
 
அவர்கள் மனமுடைந்து குமுறி அழும்போது எம் நெஞ்சை உலுக்கியது. எனது விழிகளின் விளிம்புகளில் முட்டி நின்றன  வெப்பம் தெறிக்கும் கண்ணீர்த் திவலைகள்.
 
எங்கள் பிணங்களின் மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும் என கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்?  இங்கே பிறந்தோம்; வளர்ந்தோம்; வாழ்கிறோம். இந்நிலையில் எப்படி இம்மண்ணை, எம் தாய் மண்ணை விட்டு வெளியேறுவோம்?அது ஒருபோதும் இங்கே நடவாது என பொங்கினர்